பல் மருத்துவ படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அளவு குறைப்பு

நாடு முழுவதும் பல் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண் அளவை, அனைத்து பிரிவினருக்கும் 10 சதவீதம் குறைத்து, தேசிய பல் மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.
பல் மருத்துவ படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அளவு குறைப்பு
x
இதன்படி பொது பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 50-லிருந்து 40 சதவீதமாகவும், ஓபிசி மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான மதிப்பெண் அளவு 40-லிருந்து 30 சதவீதமாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான மதிப்பெண் 45-லிருந்து 35 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது. தகுதி மதிப்பெண் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால், கூடுதலாக தகுதி பெறக்கூடிய மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டிலேயே பல் மருத்துவ படிப்பில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் மருத்துவ கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில்,  இது குறித்து மத்திய அரசு உத்தரவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்