ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் - இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதாக கூறி இழப்பீடு வழங்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் - இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
x
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதாக கூறி இழப்பீடு வழங்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.மாங்காட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண், தமக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாகவும் இதற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்த போது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றிக்  கொண்ட பிறகு தான், ஹெச் ஐ வி நோய் தொற்று ஏற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் உரிய சிகிச்சைகள் அளித்ததாகவும், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார் . இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்