கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் குறித்த கருத்து - அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்க கோரிக்கை

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் குறித்த கருத்தை நீக்க கோரிய விவகாரத்தில் 23 வழக்கறிஞர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் குறித்த கருத்து - அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்க கோரிக்கை
x
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக பெற்றோர்கள் கருதுவதாக தீர்ப்பு ஒன்றில், நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, பெண்கள் மற்றும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை இனி நீதிபதி வைத்தியநாதன் விசாரிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம், 64 வழக்கறிஞர்கள் புகார் அளித்திருந்தனர்.

நீதிபதி வைத்தியநாதன் மட்டுமல்லாமல் நீதிபதி கிருபாகரனும் இதேபோல வழக்கிற்கு சம்பந்தமில்லாத கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே, தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த கருத்துகளை நீதிபதி வைத்தியநாதன் நீக்கினார்.

இந்நிலையில், வழக்கறிஞர்களின் இந்த செயலை நீதிமன்ற அவமதிப்பாக கருதி 23 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்க கோரி அரசு தலைமை வழக்கறிஞரிடம்,  வழக்கறிஞர்கள் செளந்தரராஜன், ராமமூர்த்தி, பாபு, அஸ்வதாமன் ஆகியோர் மனு அளித்துள்ளார். இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்