தமிழிசைக்கு தலைவர்கள் வாழ்த்து...

தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, திமுக எம்பி கனிமொழி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழிசைக்கு தலைவர்கள் வாழ்த்து...
x
தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, திமுக எம்பி கனிமொழி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தெலங்கானா மக்களுக்காக தமிழிசை சிறப்பாக பணியாற்றுவார் என நம்புகிறேன் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு பல்வேறு கட்சித்த தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். தொலைபேசியில் தமிழிசையை தொடர்பு கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அதிமுக முக்கிய நிர்வாகி செம்மலை, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்