பழனி பஞ்சாமிர்த கடை உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை

பழனியில் இயங்கிவரும் சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பழனி பஞ்சாமிர்த கடை உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை
x
பழனியில் இயங்கிவரும் சித்தனாதன் மற்றும் கந்தவிலாஸ் பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மலை அடிவாரத்தில் உள்ள கந்தவிலாஸ் பஞ்சாமிர்த கடை மற்றும் அதன் உரிமையாளருக்கு சொந்தமான திருமணமண்டபம், வீடு, குடோன் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சித்தனாதன் பஞ்சாமிர்த கடையின் உரிமையாளர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையில், கணக்கில் காட்டப்படாத தங்க நகைகள், சொத்து ஆவணங்கள் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்