கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
x
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைகளை நம்பி ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்திருந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆலைகளும் மூடப்பட்டதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்