கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை : விசாரணைக்கு பிறகு 5 இளைஞர்கள் விடுவிப்பு

கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, 5 இளைஞர்களையும் விடுவித்தனர்.
கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை : விசாரணைக்கு பிறகு 5 இளைஞர்கள் விடுவிப்பு
x
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி கோவையில், உமர் பாரூக், சனாபர் அலி, சமேஷா முபின், முகமது யாசீர், சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் காலை 5 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 5 பேரிடமிருந்து லேப்டாப்கள், அரபு மொழி புத்தகங்கள், சிம் கார்டு, ஏ.டி.எம். கார்ட் கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனிடையே, உமர் பாரூக், ஷனாபர் அலி, முபின், முகமது யாசிப், சதாம் உசேன் ஆகிய 5 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், எவ்வித குற்றச்சாட்டும் உறுதி ஆகாததால் 5 இளைஞர்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதில் சதாம் உசேன், முகமதுயாசிர் ஆகியோரை மட்டும் நாளை கொச்சி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்