டிரஸ்ட் தொடங்க உதவி செய்வதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி - 2 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை

டிரஸ்ட் தொடங்க உதவி செய்வதாக கூறி 26 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டிரஸ்ட் தொடங்க உதவி செய்வதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி - 2 பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை
x
சிவகங்கை அருகே செங்கிளிபட்டியை சேர்ந்த உதயகுமார் என்பவர் டிரஸ்ட் தொடங்க உதவி செய்ய கோரி திருப்பத்தூரை சேர்ந்த கலைவாணி மற்றும் அவரது  மாமியார் மெர்ஸிவிக்டோரியா ஆகியோரை அணுகியுள்ளார்.இதனையடுத்து லண்டனில் இருந்து 10 கோடி நிதி வந்துள்ளது எனவும் அதனை கொண்டு தொடங்கப்படும் கிருஸ்துவ மிஷினரி டிரஸ்டின் தலைவராக அவரை நியமிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் அதற்கு வரி கட்டுவதற்காக 26 லட்சம் ரூபாய் வேண்டும் கூறிய அந்த பெண்கள், அதனை உதயகுமாரிடம் இருந்து பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.இதனையடுத்து உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்