சிறை கண்காணிப்பாளரை தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு : பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மீது புகார்

சென்னை புழல் சிறை கண்காணிப்பாளரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை கண்டித்து தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில் , பிலால் மாலிக் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறை கண்காணிப்பாளரை தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு : பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மீது புகார்
x
சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கான குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்ற போது கைதிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் தேவைகள் குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். இக்கூட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு பிரிவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளான பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து  சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் இருவரிடமும் விசாரித்துள்ளார். அப்போது இருவரும் சிறை கண்காணிப்பாளரை தரக்குறைவான வார்த்தைகளால் இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை கண்டித்து பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய இருவரும் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புழல் சிறைக்குள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்