முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் ஏன்? - உண்மை காரணத்தை சொல்ல வேண்டும் - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை

வெளிநாட்டு பயணம் குறித்து உண்மையான காரணங்களை முதலமைச்சர் பழனிசாமி தெளிவுப்படுத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் ஏன்? - உண்மை காரணத்தை சொல்ல வேண்டும் - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை
x
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், எனது தனிப்பட்ட பயணத்துடன் முதலமைச்சரின் அரசு முறை பயணம் குறித்து ஒப்பிடுவது முறையல்ல என்றார்.  மேலும், தமிழகத்தில் நடந்த இரு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் முதலீடுகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டதா எனக் கேட்ட ஸ்டாலின், மாநாடு முடிந்து ஏழு மாதங்கள் கழித்து முதலமைச்சர் வெளிநாடு போவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் கேள்விக்கு முறையாக பதில் சொல்லாமல், உள்நோக்கம் கற்பிக்கும் முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்