சோழவந்தானில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை : தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

மதுரை மாவட்டம் இரும்பாடியில் பட்டபகலில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோழவந்தானில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை : தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
சோழவந்தான் அருகே  உள்ள ஊத்துக்குழியை சேர்ந்த பாபு மதுரை விராட்டிப்பத்து பகுதியில் வெல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். இன்று காலை வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் அவர் வேலைக்கு சென்ற போது பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பாபுவை வழிமறித்து, கத்தி மற்றும் அரிவாளால் சராமரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பாபு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சோழவந்தான் போலீசார் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என தெரியவந்துள்ள நிலையில், தலைமறைவான 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்