8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவைக் கண்டுள்ளது.
8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவடைந்து வரும் ரூபாய் மதிப்பு
x
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பின்னர் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72 ரூபாய் வரை சரிந்துள்ளது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் 69 ரூபாய் 30 காசுகளாக இருந்த ரூபாய் மதிப்பு, தற்போதைய நிலவரப்படி 72 ரூபாய் வரை சரிவைக் கண்டுள்ளது.  இது, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், ஒரே மாதத்தில் அதிகபட்ச சரிவாக  உளளது. 2008  ஆம் ஆண்டுக்கு பின்னர் சீன யுவான் மதிப்பு சரிவை கண்டுள்ளதால் சர்வதேச நாணய சந்தைகளிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நிய முதலீடுகள் வெளியேறி வருவதால்  இந்திய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டு வருகின்றன. தங்கம், வெள்ளி விலைகளிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்