அரசு திட்டங்கள் குறித்து களஆய்வு செய்யுங்கள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்

அரசின் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு மாதமும் களஆய்வு நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
அரசு திட்டங்கள் குறித்து களஆய்வு செய்யுங்கள் - மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
x
சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்ட ஆட்சியர்களுடனான 2 நாள் ஆய்வுக் கூட்டம் இன்று தொடங்கியது.முதல்நாளில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட 17 மாவட்டங்களின் ஆட்சியர்கள் இந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.அப்போது குடிமராமத்து, மழைநீர் சேகரிப்பு, பசுமை வீடுகள் கட்டும் திட்டம், பொதுவிநியோகம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்திய முதலமைச்சர் ஆய்வறிக்கையை மாதந்தோறும், தம்முடைய அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.மேலும், இதுபோன்ற ஆய்வுக்கூட்டம் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தமது தலைமையில் நடைபெறும் என்றும் முதலமைச்சர், அப்போது தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்