இன்று கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைதி பேரணி நடைபெற உள்ளது.
இன்று கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
x
கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி   சென்னை அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் நோக்கி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற உள்ளது. மாலையில் - கோடம்பாக்கம் முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் திருஉருவ சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். பின்னர் , இரவு சென்னை -  ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். முரசொலி முகப்பு தோற்றத்தில் விழா மேடை அமைக்கும் பணியை ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.   


Next Story

மேலும் செய்திகள்