குடிமராமத்து பணிகள் தொடக்க விழா - முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கிறார்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே இன்று நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று குடிமராமத்து பணிகளை தொடங்கி வைக்கிறார்.
குடிமராமத்து பணிகள் தொடக்க விழா - முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கிறார்
x
பொன்னேரி அருகே மஞ்சன்காரனை ஊராட்சிக்குட்பட்ட கூரம்பாக்கம் கிராமத்தில்  குடிமராமத்து பணி தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று குடிமராமத்து
மற்றும் நீர் மேலாண்மை இயக்க பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். இதையொட்டி விழா பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்விழாவில் அமைச்சர்கள்  வேலுமணி,  பெஞ்சமின்,
மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.  விழாவில் 
ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்