மலையில் இருந்து தள்ளி விட்டு இளைஞர் கொலை...

மதுரை வத்ராயிருப்பை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு சென்றார்.
மலையில் இருந்து தள்ளி விட்டு இளைஞர் கொலை...
x
மதுரை வத்ராயிருப்பை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு சென்றார். மலையில்  நடந்து சென்றபோது ராம்குமார் தவறி விழுந்து இறந்தார் என்று முதலில் கூறப்பட்டது . போலீசாரின் விசாரணையில் ராம்குமாரை அவரது நண்பர்கள் தள்ளிவிட்டு கொலை செய்தது தெரியவந்தது, இதையடுத்து அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது, இந்நிலையில் கொலையில் தொடர்புடைய ராம்குமாரின் நண்பர்கள் வினோத்குமார் மற்றும்  சரவணன் மதுரை 1வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை வருகிற 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு ஸ்ரீதேவி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்