வாழப்பாடி அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த பரிதாபம்

வாழப்பாடி அருகே வெள்ளாள குண்டம் கிராமத்தில் மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த பரிதாபம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த பரிதாபம்
x
சேலம், வாழப்பாடி அருகே வெள்ளாள குண்டம் கிராமத்தில்,மகன் இறந்த அதிர்ச்சியில், தாயும் உயிரிழந்த பரிதாபம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 55 வயதான முருகேசன் என்பவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தனது மகன் இறந்த அதிர்ச்சியில், மனவேதனையில் இருந்த 70 வயதான ராஜம்மாள், மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இதையடுத்து இருவரது உடல்களும் ஒரே ஆம்புலன்சில் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் உறவினர்கள் இடையேயும், அப்பகுதி மக்கள் இடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்