பொற்றாமரை குளத்தில் உள்ள குப்பை கூளங்களை அப்புறப்படுத்த கோரிக்கை

கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் உள்ள குப்பை கூளங்களையும் அசுத்தங்களையும் அப்புறப்படுத்தி தண்ணீர் நிரப்ப சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொற்றாமரை குளத்தில் உள்ள குப்பை கூளங்களை அப்புறப்படுத்த கோரிக்கை
x
கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் உள்ள குப்பை கூளங்களையும், அசுத்தங்களையும் அப்புறப்படுத்தி தண்ணீர் நிரப்ப சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மகாமக திருவிழாவின் போது பொற்றாமரை குளத்தில் புனித நீராடப்படுகிறது. இந்நிலையில் இந்த குளத்தின் வடகிழக்கு மூலையில் துர்நாற்றம் வீசும் குப்பை கூளங்களும், பாட்டில்களும், பிளாஸ்டிக் பைகளும் அதிக அளவில் உள்ளன. இவற்றால் தொற்று நோய் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள பொதுமக்கள், குப்பைகளை அகற்றி குளத்தில் தண்ணீர் நிரப்பவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்