குற்றாலத்தில் விருந்தினர் இல்லம் திறப்பு விழா : தட்சண மாற நாடார் சங்கம் சார்பில் திறக்கப்பட்டது

குற்றாலத்தில் தட்சண மாற நாடார் சங்கம் சார்பில் விருந்தினர் இல்லம் புதிதாக திறக்கப்பட்டது.
குற்றாலத்தில் விருந்தினர் இல்லம் திறப்பு விழா : தட்சண மாற நாடார் சங்கம் சார்பில் திறக்கப்பட்டது
x
குற்றாலத்தில் தட்சண மாற நாடார் சங்கம் சார்பில் விருந்தினர் இல்லம் புதிதாக திறக்கப்பட்டது. ராம் ஆலயம் பகுதியில் திறக்கப்பட்ட இந்த விருந்தினர் இல்லத்தை ஆச்சி மசாலா குழும தலைவர் பத்மசிங் ஐசக் திறந்து வைத்தார். சங்கத்தின் தலைவர் காளிதாசன் விழாவிற்கு தலைமை தாங்கினார். இந்த விருந்தினர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் கூட்ட அரங்கை சங்கத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் திறந்து வைத்தார். விழாவில் தொழில் அதிபர் வைகுண்டராஜன், முன்னாள் போலீஸ் அதிகாரி ஜான் நிக்கல்சன் மற்றும் சங்க நிர்வாகிகள், இயக்குனர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

Next Story

மேலும் செய்திகள்