சதுரகிரி கோவிலில் ஆடிப்பெருக்கு விழா : பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு

ஆடிப்பெருக்கை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள், மினி பேருந்தை சிறை பிடித்தனர்.
சதுரகிரி கோவிலில் ஆடிப்பெருக்கு விழா : பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு
x
ஆடிப்பெருக்கை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்   பக்தர்கள், மினி பேருந்தை சிறை பிடித்தனர். தரை  மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி கோவிலில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு  தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வழிபாட்டிற்காக சென்றனர். ஆனால், பக்தர்களுக்கு,  வனத்துறை அனுமதி வழங்காததால் பக்தர்கள் மினி பேருந்தை  சிறை பிடித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 


Next Story

மேலும் செய்திகள்