கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 6,000 கன அடி நீர் திறப்பு : தமிழகத்திற்கு 7,000 கனஅடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 7 ஆயிரம் கன அடி காவிரி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 6,000 கன அடி நீர் திறப்பு : தமிழகத்திற்கு 7,000 கனஅடி நீர் திறப்பு
x
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, கர்நாடக அணைகளுக்கு சீரான நீர்வரத்து உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி,  கபினி அணையிலிருந்து ஆயிரம் கன அடி என மொத்தம் 7 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்திற்கு தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. 
இதற்கிடையே, கர்நாடக விவசாயிகளுக்காக, கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து நேற்று வரை பாசன கால்வாயில் திறக்கப்பட்டு வந்த 3 ஆயிரம் கன அடி நீர், தற்போது, வரத்து குறைவு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
 


Next Story

மேலும் செய்திகள்