"மேம்பாலத்தில் வளரும் செடிகளை அகற்றுக" - விஜயகாந்த்

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலங்களில் வளரும் செடிகள், மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
மேம்பாலத்தில் வளரும் செடிகளை அகற்றுக - விஜயகாந்த்
x
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலங்களில் வளரும் செடிகள், மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். பல கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மேம்பாலங்கள், முறையான பராமரிப்பின்றி கிடப்பதாக குற்றம் சாட்டிய அவர், மரத்தின் வேர்கள் ஊடுருவதால் கட்டுமானம் பலவீனமாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மேம்பாலங்களில் ஆய்வு மேற்கொண்டு, செடி, மரங்களை அகற்ற வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்