சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முடிவு : கைவிடுமாறு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முடிவு : கைவிடுமாறு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடப்பாக விடுத்துள்ள அறிக்கையில், சேலம் உருக்காலையை வாங்க உலக சந்தையில் போதிய ஆர்வம் காட்டப்படாத நிலையில், மீண்டும், மீண்டும் அதை விற்க முயற்சிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். உற்பத்தி திறன் மற்றும் சந்தைப்படுத்துதல் திறனை அதிகரித்து, அதன் மூலம் ஆலையை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கான முதல் பணியாக சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்வதற்காக நீட்டிப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை ரத்து செய்து, ஆலை பொதுத்துறை நிறுவனமாகவே இயங்கும் என அறிவிக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்