ரூ.1.66 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசுப்பள்ளி கட்டடம் : அடிப்படை வசதிகள் இல்லாததால் திறக்கப்படாத அவலம்

கடலூர் மாவட்டம் திருநாரையூரில் புதிதாக கட்டப்பட்ட அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பழைய கட்டடத்திலேயே பள்ளி இயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ரூ.1.66 கோடியில் கட்டப்பட்ட புதிய அரசுப்பள்ளி கட்டடம் : அடிப்படை வசதிகள் இல்லாததால் திறக்கப்படாத அவலம்
x
கடலூர் மாவட்டம் திருநாரையூரில் புதிதாக கட்டப்பட்ட அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பழைய கட்டடத்திலேயே பள்ளி இயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததாக கூறப்படுகிறது. எனவே புதிய பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்