குளிர்பான பாட்டிலில் பாலிதீன் பேப்பர் : கோலா நிறுவனத்திற்கு ரூ.75,000 அபராதம்

குளிர்பான பாட்டிலில் பாலிதீன் பேப்பர் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், கோவை நுகர்வோர் நீதிமன்றம் கோலா நிறுவனத்திற்கு 75 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
குளிர்பான பாட்டிலில் பாலிதீன் பேப்பர் : கோலா நிறுவனத்திற்கு ரூ.75,000 அபராதம்
x
குளிர்பான பாட்டிலில் பாலிதீன் பேப்பர் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், கோவை நுகர்வோர் நீதிமன்றம் கோலா நிறுவனத்திற்கு 75 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு, தொடரப்பட்டிருந்த இந்த வழக்கில், தரமற்ற வகையில் குளிர்பானம் தயாரித்த கொக்க கோலா நிறுவனத்திற்கு 75 ஆயிரம் ரூபாயும், பரிசோதனை செய்யாமல் விற்பனை செய்த மளிகை கடைக்காரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீ​திபதி உத்தரவிட்டுள்ளார். மனுத்தாரரின் கோரிக்கைப்படி, இந்த தொகையில் 100 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தேவையான சத்தான பொருட்கள் ஒரு மாதத்திற்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்