கும்பகோணத்தில் மாணவர்களை கண்டித்த ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல்

கும்பகோணத்தில் ஒழுங்காக படிக்க கூறிய ஆசிரியரை மாணவர்கள் தாக்கினர்.
கும்பகோணத்தில் மாணவர்களை கண்டித்த ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல்
x
கும்பகோணத்தில் ஒழுங்காக படிக்க கூறிய ஆசிரியரை மாணவர்கள் தாக்கினர். கும்பகோணம் நால்ரோடு அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில், 12ஆம் வகுப்பு மாணவர்களை ஆசிரியர் கல்யாண சுந்தரம் கண்டித்துள்ளார். இதனால்,  ஆத்திரமடைந்த மாணவர்கள், ஆசிரியர் வீட்டுக்கு செல்லும் போது அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு ஒரு கண் பார்வை பாதிக்கப்பட்டது.  இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஆசிரியரை தாக்கிய 3 மாணவர்கள் பள்ளிக்கு வராமல்  தலைமறைவாகியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்