அரிசி, கடலை மாவு மூட்டைகளை கிழித்துச் சென்ற திருடன் : பணம் இல்லாததால் இந்த குரங்கு வேலை

மளிகை கடையில் திருடச் சென்றபோது கல்லாவில் பணம் இல்லாததால், அரிசி, கடலை மாவு மூட்டைகளை சேதப்படுத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரிசி, கடலை மாவு மூட்டைகளை கிழித்துச் சென்ற திருடன் : பணம் இல்லாததால் இந்த குரங்கு வேலை
x
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குப்பத்தில் மளிகைக் கடை நடத்தி வரும் ஜெயராஜ் என்பவர், இன்று காலை கடையை திறந்தபோது, அதிர்ச்சிக்குள்ளானார். கடைக்குள் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததோடு, அரிசி மற்றும் கடலை மாவு மூட்டைகள் பிளேடால் கிழிக்கப்பட்டிருந்தன.  கடையின் மேல்பக்க கூரையும் உடைக்கப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ஜெயராஜ், கல்லாபெட்டியில் பார்த்தபோது, ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில், " உயிரை பணயம் வைத்து திருட வந்தால், பணமே இல்லாமல் கல்லாவை தொடச்சி வச்சி ஏமாற்றலாமா. அதற்குதான் இந்த குரங்கு வேலை" என எழுதப்பட்டிருந்தது. கூரையை உடைத்து திருட வந்த இடத்தில், பணம் இல்லாததால் ஏமாற்றமடைந்த திருடன், இதுபோன்று செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக, ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில், மந்தாரகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்