கால்களை இழந்தவர்களுக்கு நவீன செயற்கை கால் : மதுரை அரசு மருத்துவமனையில் நவீன முயற்சி

கால்களை இழந்தவருக்கு நவீன செயற்கை கால்களை பொருத்தி மதுரை அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
கால்களை இழந்தவர்களுக்கு நவீன செயற்கை கால் :  மதுரை அரசு மருத்துவமனையில் நவீன முயற்சி
x
தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்து மூலம் கால்களை இழந்த நான்கு நோயாளிகளுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்தில் காலை இழந்த மேலூரைச் சேர்ந்த பிரபு, விருதுநகரை சேர்ந்த கங்கை முருகன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரகுமார் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலை எடுக்கப்பட்ட குருவித்துறை சேர்ந்த முத்துலட்சுமி ஆகிய 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இதற்கு முன்னால் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட செயற்கைக் கால்களை விட இது மிக எடை குறைவாகும். நீண்ட நேரம் அணியவும், மேடு பள்ளங்களில் எளிதாக நடக்க உதவும் வகையிலேயே இந்த செயற்கை கால் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை கால் பொருத்தப்பட்ட 4 பேருக்கும் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் வனிதா  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்