"தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் திருத்தம் தேவை" - ராமதாஸ்

தேசிய மருத்துவ ஆணையம் அமைந்தால் மருத்துவ படிப்பு ஏலத்தில் விற்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் திருத்தம் தேவை - ராமதாஸ்
x
தேசிய மருத்துவ ஆணையம் அமைந்தால் மருத்துவ படிப்பு ஏலத்தில் விற்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் சமூக நீதிக்கு ஆபத்தான அம்சங்கள் நிறைய உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், மருத்துவ படிப்புகள் முறைப்படுத்தப்படுவதற்கு பதிலாக ஒட்டுமொத்தமாக சீரழிக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் அதற்கேற்ற திருத்தங்களை அரசு செய்ய வேண்டும் எனவும் ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்