பல்லவன் ரயிலின் மேற்கூரை வழியாக கொட்டிய மழை நீர் - உரிய பராமரிப்பு இல்லை என பயணிகள் குற்றச்சாட்டு
திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பல்லவன் ரயிலின் பெட்டிகள் சமீபத்தில் நவீனமாக மாற்றப்பட்ட நிலையில் மேற்கூரையில் இருந்து மழை நீர் கொட்டும் காட்சி வெளியாகி உள்ளது.
திருச்சியில் இருந்து சென்னைக்கு தினமும் இயக்கப்படும் பல்லவன் ரயிலை நவீனப்படுத்தும் வகையில் கடந்த ஒன்றாம் தேதி அதிநவீன சொகுசு பெட்டிகளாக மாற்றப்பட்டன. இந்நிலையில், ரயிலில் உள்ள பேண்ட்ரி கோச்சின் மேற்கூரையில் இருந்து மழை நீர் ரயிலின் உள்ளே அருவி போல் கொட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதிநவீன பெட்டிகளாக மாற்றப்பட்டு ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் ரயிலின் மேற்கூரை சேதமடைந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரயிலில் பராமரிப்பு பணிகள் முறையாக இல்லை எனவும் அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
Next Story