நாமக்கல் மாவட்டத்தில் நிலவில் உள்ளது போன்ற பாறைகள்...

சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதன் சோதனை ஓட்டத்துக்காக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நிலவில் உள்ளது போன்ற பாறைகள்...
x
நிலவின் தென் பகுதி ஆராய்ச்சிக்காக இந்தியாவில் இருந்து சந்திரயான்- 2 விண்கலம் ஏவப்பட உள்ளது. இந்த விண்கலத்தின் சோதனை ஓட்டத்துக்காக, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட 'அனோர்தோசைட் பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் புவியியல் தகவல் மைய இயக்குநர் பேராசிரியர் அன்பழகன் கூறுகையில், நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள சித்தம்பூண்டி, குன்னமலை கிராமங்களில் இருந்து சுமார் 50 டன் பாறைகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்று கூறினார். விண்கலத்தின் ஓடுதிறன் நிலவில் முழுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நிலவை போன்ற தரை அமைப்பில் சோதனை நடைபெற்றது என்றும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்