காவிரி விவகாரம் - திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

பல ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தவறி விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.
காவிரி விவகாரம் - திமுக மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
x
சட்டப்பேரவையில், பொதுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில்,எதிர்க்கட்சி  தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்போது காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்றும்,மேகதாதுவில் கர்நாடகா தடுப்பணை கட்டுவதை தடுத்த நிறுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்'' எனவும் வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், மத்திய அரசில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்த திமுக நினைத்திருந்தால் காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம் என கூறினார்.அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், சுதந்திர நாளன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தது திமுக என்றும், சேதுசமுத்திர திடடம், மண்டல் கமிசன் திமுக முயற்சியால் தான் வந்தது என்றும் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல ஆண்டுகளாக  மத்தியில் ஆட்சி, அதிகாரத்தில் இருந்த திமுக, தமிழகத்திற்கு தேவையான நன்மைகளை செய்ய தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.முக்கிய துறைகளை பெறுவதற்காக டெல்லி சென்றதாகவும் ஆனால், செயல்பட தவறி விட்டதாகவும் அவர் கூறினார்.அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், காவிரி நடுவர் மன்றம் அமைவதற்கு திமுக தான் காரணம் என கூறினார்.இதனையடுத்து காவிரி பிரச்னைக்காக தனது பதவியையே ராஜினாமா செய்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி என்றும், திமுக என்ன செய்தது என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். இதனிடையே பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், இலங்கை போருக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டிக்க வேண்டும் என பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்றும், அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்