"அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் வேலுமணி

ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து கிராமங்களுக்கு குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் வேலுமணி
x
ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து கிராமங்களுக்கு குடிநீர் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக  எம்.எல்.ஏ பெரியக்கருப்பன், ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுவதாக கூறினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி தமிழகத்தில் பல்வேறு குடிநீர் திட்டங்களில் உரிய பராமரிப்பு இல்லாதது கண்டறியப்பட்டுள்ளதாகவும், கூடுதல் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

மயானங்களுக்கு செல்லும் பாதைகளுக்கு பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய மன்னர்குடி எம்.எல்.ஏ. டி. ஆர். பி. ராஜா திருவாரூர் மாவட்டத்தில் கோரையாற்றி்ன் குறுக்கே பாலம் கட்டப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி,  அங்கு  பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 கோடியே 79 லட்சம் ரூபாயில் பாலம் கட்டப்பட்டள்ளதாகவும், தற்போது பாலத்தை ஒட்டி 3 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அந்த பணிகள் முடிவடைந்ததும் பாலம் திறக்கப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்