கடும் வறட்சி காரணமாக செத்து மடியும் தென்னை, பாக்கு : இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை

நாமக்கல் அருகே கடும் வறட்சி காரணமாக தென்னை, பாக்கு மரங்கள் மடிந்து வருவதால், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கடும் வறட்சி காரணமாக செத்து மடியும் தென்னை, பாக்கு : இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை
x
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரப் பகுதிகளில் கடந்த 5 வருடமாக போதிய மழை இல்லாததால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களில், நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழ் சென்று விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில், ஐந்து முதல் பத்து வருடங்களாக காப்பாற்றிய தென்னை மற்றும் பாக்கு மரங்கள் தற்போது அழிந்து வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும்   ஏற்படுத்தி உள்ளது. காய் வரும் தருணங்களில் கருகுவதால் மிகுந்த நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்த விவசாயிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்