"ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்" - ஸ்டாலின் சந்தேகம்

காவிரி மேலாண்மை ஆணையத்தை கலைத்து உருக்குலைப்பதற்கு "ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம்' என்ற மசோதாவை பயன்படுத்திவிடக் கூடாது என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் - ஸ்டாலின் சந்தேகம்
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த முறை இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். "நடுவர் மன்றத் தீர்ப்புகளை மத்திய அரசு,  அரசிதழில் வெளியிட வேண்டும்" என்ற  விதி  தற்போதைய மசோதாவில் ரத்து செய்யப்பட்டிருந்தால், அது மாநிலங்களில் இடையே உள்ள நதிநீர் பிரச்சினையை தீர்க்காது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  உச்சநீதிமன்ற தீர்ப்பையே கர்நாடகம் மதிக்காத போது, தீர்ப்பு அரசிதழிலில் வெளியிடவில்லை என்றால், தண்ணீர் பிரச்சினை தீராது என்பதை ஏனோ பா.ஜ.க. உணர மறுப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். நதி நீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் நீண்ட காலம் இழுத்தடிக்கும் நோக்கில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "ஒரே நதிநீர்த் தீர்ப்பாயம் என்ற மசோதாவால் காவிரி இறுதித் தீர்ப்பிற்கு எந்த விதத்திலும் ஊறு விளைவித்து விடக்கூடாது என்ற உத்தரவாதத்தை தமிழக அரசு  அழுத்தம் கொடுத்து மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்