குரூப் 3, குரூப் 4 போன்ற அரசுப் பணிகளுக்கு தகுதி என்ன? - அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய உத்தரவு

குரூப் 3, குரூப் 4 போன்ற அரசுப் பணிகளுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய நிர்வாகத்துறை முதன்மை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
குரூப் 3, குரூப் 4 போன்ற அரசுப் பணிகளுக்கு தகுதி என்ன? - அதிகபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய உத்தரவு
x
சக்கரைசாமி என்பவர்  தாக்கல் செய்த மனுவில், எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்ற நிலையில்,  தமக்கு கூடுதல் கல்வித் தகுதி என்று கூறி, பணி நிராகரிக்கப்பட்டதாக புகார் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம்.சுப்பிரமணியம், கூடுதல் கல்வித் தகுதி உடையவர்கள் பணி கிடைத்தவுடன்,முறையாக பணியாற்றுவதில்லை என்று தெரிவித்தார். மேலும் உயர் அதிகாரிகளும், அவர்களை வேலை வாங்க சிரமப்படுவதாக நீதிபதி குறிப்பிட்டார். இதனால், குரூப் 3, குரூப் 4 போன்ற அடிப்படை அரசுப் பணிகளுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை 12 வாரங்களுக்கு நிர்வாகத்துறை முதன்மை செயலர் நிர்ணயம் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்