தனியார் பள்ளிக்கு நிலத்தின் உரிமையாளர் பூட்டு : கதவை உடைத்து பெற்றோர்கள் போராட்டம்
பதிவு : ஜூலை 09, 2019, 06:23 PM
சென்னை மதுரவாயல் அருகே தனியார் பள்ளிக்கு நிலத்தின் உரிமையாளர் பூட்டு போட்டதால் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மதுரவாயல் அருகே தனியார் பள்ளிக்கு நிலத்தின் உரிமையாளர் பூட்டு போட்டதால் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெற்குன்றம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு வழக்கம் போல் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்துள்ளனர் ,ஆனால், பள்ளி கேட் மூடப்பட்டு இருந்தது. மேலும் பள்ளியினுள் இருந்தவர்கள் பள்ளி இனி இயங்காது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளியின் கேட்டை உடைத்து உள்ளே சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். . தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் பள்ளி நிர்வாகம் நிலத்தை 10 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்ததும், தற்போது கால அவகாசம் முடிந்துவிட்டதால் பள்ளியை நில உரிமையாளர்கள் பூட்டி விட்டதும் தெரியவந்தது. ஒரு வாரத்திற்குள் பிரச்சினையை தீர்ப்பதாக பள்ளி நிர்வாகம் உறுதி அளித்ததை அடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

1046 views

பிற செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2,500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

17 views

ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமா? - மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக மறுப்பு

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதாக கூறுவது தவறு என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

18 views

காவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது - டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி

காவல்துறையினர் பரிசுப் பொருட்கள் மற்றும் வரதட்சணை வாங்கக் கூடாது என டி.ஜி. பி. ஜே.கே. திரிபாதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

17 views

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் - டி.டி.வி.தினகரன்

ஆர்.டி.ஐ சட்டத் திருத்த மசோதா தகவல் அறியும் உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் என்று டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

14 views

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

41 views

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் - பூங்கோதை

நெல்லையில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.