ஜோலார்பேட்டை : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
ஜோலார்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அப்பகுதி பெண்கள், காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அப்பகுதி பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story