ஜோலார்பேட்டை - சென்னைக்கு ரயிலில் குடிநீர் : இன்று சோதனை ஓட்டம்

சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் வழங்குவதற்காக, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்தது.
ஜோலார்பேட்டை - சென்னைக்கு ரயிலில் குடிநீர் : இன்று சோதனை ஓட்டம்
x
சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் வழங்குவதற்காக, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்தது. சென்னையில், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இதை போக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜோலார்பேட்டை அருகே உள்ள மேடுசக்கரகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தரைமட்ட குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு குடி தண்ணீர் கொண்டு செல்ல போர்க்கால அடிப்படையில் இரவு - பகல் பாராமல் பணிகள் நடைபெற்று வருகிறது. நிமிடத்திற்கு ஆயிரத்து 200 லிட்டர் தண்ணீர் வெளியேற்றும் திறன் கொண்ட வேலைப்பாடுகள், 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதனிடையே நாளை முதல் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடத்தப்படும் என தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்