சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் கொள்ளை

சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற நபரை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் கொள்ளை
x
சேலத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற நபரை, சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். அஸ்தம்பட்டி அருகே காந்திரோடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மருத்துவர் இளங்கோ வீட்டில், பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறியது. 19 சவரன் நகை 40 ஆயிரம் ரொக்கப்பணம் மாயமான கொள்ளை சம்பவம் தொடர்பாக, அஸ்தம்பட்டி போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சந்தேகப்படும்படியாக, வந்த நபர் ஒருவரின் உருவம் பதிவாகியிருந்த‌து. இதையடுத்து அவரது வீடியோவை வெளியிட்ட போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்