தந்தி டிவியின் தாக்கம் : சேங்கல் பகுதி மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

தந்தி டிவியில் செய்தி வெளியானதையடுத்து, நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக கரூர் மாவட்டம் சேங்கல் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
x
கரூர் மாவட்டம்  சேங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட மேலபண்ணை களம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வந்த தண்ணீர் பிரச்சினை குறித்து "தாகம் தீர்வு" என்ற தலைப்பில் தந்தி டிவியில் செய்தி வெளியானது. இதனையடுத்து, சேங்கல் கிராமத்திற்கு சென்ற அதிகாரிகள், அங்கிருந்த ஆழ்குழாய் கிணற்றை ஆழப்படுத்தியதுடன், புதிய மோட்டாரையும் பொருத்தி பொது மக்களுக்கு குடி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தனர். அதேபோல் புதூர் சுக்காம்பட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் லாரிகள் மூலம் 2  நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் புதூர் சுக்காம்பட்டி கிராமத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பற்கான இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர். தந்தி டிவியில் செய்தி வெளியான பிறகே நீண்ட நாட்களாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்