ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் : 10 -ஆம் தேதி முதல் தொடங்கும்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் பணி வரும் 10 -ஆம் தேதி தொடங்குகிறது.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் : 10 -ஆம் தேதி முதல் தொடங்கும்
x
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் பணி வரும் 10 -ஆம் தேதி தொடங்குகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சக்கர குப்பம் தரைமட்ட குடிநீர்  நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து, பார்ச்சம்பேட்டை ரயில்வே கேட் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், ராட்சத குழாய் அமைக்கும் பணி இரவு - பகலாக நடைபெற்று வருகிறது. இதனை சென்னை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த பணிகள் நிறைவடைந்து, வரும் 10-ஆம் தேதி முதல் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்