"ஆறு மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு" - நெய்க்குப்பை கிராம மக்கள் கோரிக்கை

ஆறு மாத​ங்களுக்கு மேல் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குமாறு, திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நெய்க்குப்பை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆறு மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு - நெய்க்குப்பை கிராம மக்கள் கோரிக்கை
x
ஆறு மாத​ங்களுக்கு மேல் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குமாறு, திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நெய்க்குப்பை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூன்றாயிரம் பேர் வசிக்கும் அங்கு, மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் ஆறு சிண்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தண்ணீர் ஏற்றப்படாமல், பழுதான தொட்டிகள் அவை பயனற்று கிடப்பதாக கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர். ஊராட்சியின் மற்ற இடங்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படுவதாக கூறும் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்கின்றனர். மின்தடை நிலவுவதால் தண்ணீர் ஏற்றமுடியவில்லை என அதிகாரி பொய் சொல்வதாகவும் நெய்க்குப்பை மக்கள் வேதனை தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்