சுகாதாரத் துறையில் காலியிடமே இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்களே இல்லாத சூழல் நாளை முதல் உருவாக உள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையில் காலியிடமே இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்
x
சட்டப்பேரவையில் பேசிய திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், டெங்கு ஆரம்பித்த திருவள்ளூரில், தற்போது, அதிகளவில் நோய் தொற்றுகள் ஏற்படும் சூழல் இருப்பதாக கூறினார். எனவே, புதுமாவிலங்கையில், ஆரம்ப சுகாதார நிலையமும், 108 ஆம்புலன்ஸ் சேவையும் ஏற்படுத்தி தருமாறு கோரினார். இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு ஆரம்பித்த இடம்  மட்டுல்ல, அதை முடித்து வைத்து முதலாவது இடமும் திருவள்ளூர்தான் என்றார். கடந்த ஆண்டில் மட்டும், 12 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 8 ஆண்டுகளில் மொத்தம் 254 சுகாதார நிலையங்களும் கட்டப்பட்டுள்ளதாக பேசிய விஜயபாஸ்கர், கிராமப்புற சுகாதார சேவையை உறுதிப்படுத்தியதில் தமிழகம் முதன்மை மாநிலம் என்றார்.  524 பணியிடங்கள் நாளை நிரப்பப்படுவதன் மூலம், காலிப் பணியிடமே இல்லாமல், சுகாதாரத் துறை திகழ்வதாக அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்