மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துவரும் மழைநீர் சேமிப்பு குட்டை...

காங்கேயம் அருகே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு குட்டையால், கடும் வறட்சியிலும் கூட கிணறுகள்,குளங்களில் நீர் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
x
காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையம் சார்பில், வள்ளியரச்சல் கிராமத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் மழைநீர் சேகரிப்பு குட்டை அமைக்கப்பட்டது. தற்போது அந்த குட்டை, கிராமமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கடும் வறட்சியிலும் கூட, அந்த கிராமத்தில் உள்ள கிணறுகள், குளங்களில் தண்ணீர் வற்றாமல் நிரம்பி வழிகிறது. இதனால், 100 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பயன்பெறுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இது  குறித்து காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிர்வாக இயக்குநர் கார்த்திகேய சிவசேனாபதியிடம் கேட்ட போது, மழை நீர் சேமிப்பை திட்டத்தை கட்டாயமாக்குவதோடு, தனி சட்டம் ஒன்றையும் தமிழக அரசு இயற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், மழைநீர் முக்கியத்துவத்தை அனைத்து மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்