பா.ம.க.வுக்கு எம்.பி. சீட் வழங்குவோம் - அமைச்சர் ஜெயகுமார்

அ.தி.மு.க. ஜெண்டில்மேன் கட்சி என்றும் பா.ம.க.வுக்கு வழங்க வேண்டிய மாநிலங்களவை இடத்தை தருவோம் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
x
ஜி.எஸ்.டி வரிவதிப்பு முறை  அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி , சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி பவனில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயகுமார்,கே.சி. வீரமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றார். பா.ம.க.வுக்கு மாநிலங்களவை இடம் அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, அ.தி.மு.க. ஜென்டில்மேன் கட்சி என்றும், சொன்னது போல், வழங்குவோம் என்றார். கடந்த காலங்களில் ஓப்பந்தப் படி வழங்கவில்லையே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கடந்த காலத்தை பார்க்க வேண்டாம் என்றும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் பதில் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்