ரவுடியை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சாலை விபத்தில்
மதுரையில் ரவுடியை கொலை செய்த வழக்கில், தேடப்பட்டு வந்த குற்றவாளி சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மதுரை பழங்காநத்தம் அடுத்த முத்துப்பட்டி பகுதியில் கடந்த மாதம் ரவுடி சவுந்தரை 10 பேர் கொண்ட கும்பல், படுகொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான செல்வம் அவரது சகோதரர் சோனை உள்ளிட்டோர் தலைமறைவானார்கள். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் செல்வம் தமது சகோதரர் சோனை மற்றும் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கோவை மாவட்டம், சூலூர் கண்ணாபாளையம் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்தானதில். மூவரும் படுகாயமடைந்தனர். இதில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செல்வம் உயிரிழந்தார். செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தப்பியோடிய சோனையை தேடி வருகின்றனர்.
Next Story