நிரந்தர பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த இந்திராநகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 2006-ல் தற்காலிக இலவச வீட்டுமனை பட்டாவை தமிழக அரசு வழங்கியது.
நிரந்தர பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
x
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த இந்திராநகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 2006-ல் தற்காலிக இலவச வீட்டுமனை பட்டாவை தமிழக அரசு வழங்கியது. ஆனால், 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை கிராம வருவாய் புத்தகத்தில் அது பதிவு செய்யப்படவில்லை என, பட்டா பெற்றவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், இலவசமாக கொடுத்த தற்காலிக பட்டாவை, கிராம புத்தகத்தில் பதிவு செய்து நிரந்தர பட்டா வழங்க கோரி, இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் - பெண்கள் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டனர். பின்னர், வட்டாட்சியர் சாந்தியிடம் அவர்கள் தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்