"கழிப்பிடம் இருக்கு..ஆனா தண்ணி இல்ல"- சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேதனை

கோயம்பேடு காய்கறி சந்தையில், போதிய கழிப்பிடங்கள் இருந்தும், அதில் தண்ணீர் வராததால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
x
காய்கறி சந்தையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். உறங்கும் வேளையில் உழைக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்காக,  சந்தை வளாகத்தில் கட்டண கழிப்பிடங்கள் செயல்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக இங்கு தண்ணீர் வராததால், இயற்கை உபாதைகள் கழிப்பதற்கும், குளிப்பதற்கும் முடியாமல் கடும் அவதியுறுகின்றனர். குளிப்பதற்கு 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டணம் வசூலித்தும் கூட, தண்ணீர் இல்லாத சூழலே நிலவுவதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தங்களின் நலன் கருதி, சந்தையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்