பி.இ. கலந்தாய்வு - தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், இன்று வெளியாகிறது.
பி.இ. கலந்தாய்வு - தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
x
பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், இன்று வெளியாகிறது. 2019-20-ஆம் ஆண்டுக்கான பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு ஜூன் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குநரக வளாகத்தில், இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட உள்ளார். ஜூன் 25-இல் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்